புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தல்கள் இந்த மாத தொடக்கத்தில் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற ஜோ பிடனுடன், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன் முறையாக செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிடனுக்கும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கும் (Kamala Harris) பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா-அமெரிக்க இடையிலான செயலுத்தி கூட்டாண்மை குறித்த புது தில்லியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பகிரப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இருவரும் கலந்தாலோசித்தனர்.


மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் மோடி அவர்கள், “அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுடன் தொலைபேசியில் பேசி அவரை வாழ்த்தினேன். இந்தியா-அமெரிக்கா இடையிலான செயலுத்தி கூட்டாண்மைக்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். மேலும் எங்கள் பகிரப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் அச்சுறுத்தல்கள், COVID-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் விவாதித்தோம்.” என்று எழுதினார்.



மேலும், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது, இந்திய-அமெரிக்க சமூகத்திற்கு பெரும் பெருமை என்று பிரதமர் மோடி (PM Modi) கூறினார்.


ALSO READ: ராமாயணம், மகாபாரதத்துடன் என் குழந்தைப் பருவம் கழிந்தது: Barack Obama


"துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட @KamalaHarris கமலா ஹாரிஸுக்கும் நான் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவரது வெற்றி இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய பலமாக விளங்கும். துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இது மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிக்கிறது" என்று பிரதமர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.



இதற்கிடையில், பிடென்-ஹாரிஸ் அதிபர் பணிக்குழு ஒரு செய்திக்குறிப்பில், இந்தியப் பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் (Joe Biden) தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதாகவும், தெற்காசிய வம்சாவளியிலிருந்து முதன் முறையாக அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெட்டுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசுடன் சேர்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான செயலுத்தி கூட்டாண்மையை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. 


ALSO READ: "Gupkar gang" மற்றும் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமித் ஷா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR