பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம்!!
இன்று பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இன்று பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறார். இதன்படி இன்று ஜோர்டான் செல்லும் மோடி, அதன் தலைநகர் அம்மானில் தங்கிவிட்டு, நாளை ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனத்தின் ரமல்லாஹ் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மெஹமூத் அப்பாஸை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து துபாயில் நடக்கும் உலக நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் கலந்துக்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பிப்ரவரி 10-ம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.