ஹிரோஷிமா: தற்போது ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடனைக் கட்டித் தழுவி வரவேற்றார். அதன் வீடியோ வெளியாகியுள்ளது. ஜப்பானில் நடைபெற்று வரும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது மனைவி வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி மண்டபத்தில் வந்து அமர்ந்தார். மோடியின் ஒரு பக்கத்தில் தென்கொரிய அதிபரும், பிரான்ஸ் அதிபரும் அமர்ந்திருந்தனர். அமெரிக்க அதிபர் மண்டபத்திற்குள் நுழைந்ததும், தனது இருக்கைக்கு செல்லாமல் பிரதமர் மோடியை நோக்கி வரத் தொடங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது இருக்கைக்கு செல்லாமல் பிரதமர் மோடியை நோக்கி வந்த ஜோ பைடன்


அமெரிக்க அதிபரின் வருகையை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நாற்காலியில் இருந்து எழுந்து சென்று அவரை கட்டித் தழுவி வரவேற்றார். அமெரிக்க அதிபரின் நாற்காலி மறுபுறம் இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக மட்டுமே அவர் நோக்கி வந்தார். கட்டி அணைத்துக் கொண்ட பிறகு, இருவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்தபடி சிறிது உரையாடினர். இதைத் தொடர்ந்து மோடி தனது நாற்காலியில் அமர்ந்து பின், ஜோ பிடன் தனது இருக்கைக்கு திரும்பத் தொடங்கினார். பிடன் நாற்காலியை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, ​​இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வந்து அவரைச் சந்தித்தார்.


பிரதமர் மோடி - ஜோ ஒபைடன் சந்திப்பு தருணத்தை கீழே காணலாம்:



பிரதமர் மோடி அடுத்த மாதம்  அமெரிக்கா செல்கிறார்


உண்மையில் இந்த ஆண்டு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்த வருடம்  இந்தியா ஏற்றுக் கொண்டு உள்ளது. இதனுடன், பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார், இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும். ஆனால் பிடனை வந்து சந்திப்பது மட்டும் முக்கியமில்லை. ஜி-7 நாடுகளின் இந்த உச்சிமாநாட்டின் முக்கிய பிரச்சினை ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் சீனா. இந்தியா எப்போதாவது சீனாவுக்கு எதிரான நிலை எடுக்கிறது, ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக அல்ல. போர் தொடங்கியதில் இருந்து, மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தும் இந்தியா ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. இது தவிர, பிடனுக்கு இந்திய வாக்காளர்களின் பெரும் ஆதரவும் உள்ளது. அதனால் இந்தியாவை பகைத்துக் கொள்ள அமெரிக்காவும் விரும்பவில்லை.


மேலும் படிக்க | PM Modi in G7 Summit: 3 நாடுகள்... 40 சந்திப்புகள்... பிரதமரின் சூறாவளிப் பயணத்தின் முழு விபரம்!


கடந்த ஆண்டும் இதே முறையில் ஜோ பைடன் சந்திப்பு


கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-7 மாநாட்டின்போதும் இதே போன்ற சில காட்சிகள் காணப்பட்டன. அந்த நேரத்தில் அதிபர் பைடன் பிரதமர் மோடியை சந்திக்க மிகுந்த ஆர்வமுடன் காணப்பட்டார். உண்மையில் அப்போது உச்சிமாநாட்டிற்கு வந்த அனைத்து தலைவர்களும் புகைப்படம் எடுப்பதற்காக படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். பின்னர் ஜோ பிடன் தனது இடத்தில் நிற்காமல் பிரதமர் மோடியை நோக்கி சென்றார். பின்னர், மோடியின் தோளில் கை வைத்தார். அதிபர் ஜோ பைடன் தோளி கை வைத்த உடன், பிரதமர் நரேந்திர மோடி படியில் ஏறி நின்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார்.


மேலும் படிக்க | காஷ்மீரில் G20 கூட்டம்... பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க பின்வாங்கும் சீனா - துருக்கி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ