இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் மார்ச் 4 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் பிரசார கூட்டம் நடைப்பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இம்பால் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லாங்ஜிங் அச்சவுபா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.


அப்போது அவர்:-


மணிப்பூர் மாநிலம் தற்போது அழிந்து வருகிறது. இதற்கு யார் காரணம்? மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங், கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஆட்சி புரிந்து வருகிறார். எனினும், கிழக்கு சுவிட்சர்லாந்து என மணிப்பூர் புகழப்படுகிறது. ஆனால் இங்கு ஏதாவது வளர்ச்சியைக் காண முடிகிறதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா? கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஆட்சி புரிந்து வரும் இவர்களால் எந்த முன்னேற்றமும் இல்லை.


பொதுமக்களாகிய நீங்கள் இந்தத் தேர்தலில் பாஜக கட்சியை தேர்ந்தெடுத்தால், பாஜக உங்களுக்கு சேவை செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு 15 வருடங்களைக் கொடுத்த நீங்கள், எங்களுக்கு வெறும் 5 ஆண்டுகளைக் கொடுங்கள். அவர்கள் 15 வருடங்களில் செய்யாததை நாங்கள் 15 மாதங்களில் செய்து காட்டுவோம். 


விவசாயிகளுக்கு தண்ணீர், குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் முதியவர்களுக்கு மருந்துகள் ஆகியவற்றை மணிப்பூர் மக்களுக்குக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்.


இன்று எங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறதோ, அங்கு முன்னேற்றம் என்பது இல்லை. ஆனால், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன". 


இவ்வாறு மோடி பேசினார்.