4 நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி சென்றார்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றப்பயணம் மேற்கொண்டார்.
இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் வழியனுப்பி வைக்க, பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதலாவதாக பிரதமர் ஜெர்மனிக்கு செல்கிறார்.
ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு நாளை ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். பிறகு 31-ம் தேதி ரஷியாவுக்கு செல்கிறார். அங்கு 18_வது இந்தியா, ரஷியா உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதன பிறகு 2-ம் தேதி (வெள்ளிகிழமை) பிரான்ஸ் செல்கிறார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருக்கும் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதிக்கின்றனர்.
பிறகு தனது சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சுற்றப்பயணத்தை மேற்கொள்கிறார்.