பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஜெயின். ஆகாஷின் சகோதரியின் திருமணத்துக்காக அவரது குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடியின் தீவிர ரசிகரான ஆகாஷின் அப்பா, பாஜக அரசின் திட்டங்களில் ஒன்றான ஸ்வச்ச பாரத் லோகோவை பயன்படுத்தி ஏன் அழைப்பிதழ் அச்சடிக்கக்கூடாது என கேட்டுள்ளார். மேலும் நாட்டின் நன்மைக்கான ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்லலாம் எனக்கூறி ஸ்வச்ச பாரத் லோகோவை போட்டு அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர், ரீடிவிட் செய்த பாஜகவினர் அந்த அழைப்பிதழ் போட்டோவை ஆகாஷ் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டதோடு பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார்.


ஆகாஷ் ஜெயின் குடும்பத்தினரின் இந்த அழைப்பிதழை பாராட்டி ஏராளமான பாஜக நிர்வாகிகள் அதனை ரீடிவிட் செய்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி ஆகாஷின் டிவிட்டை ரீடிவிட் செய்திருந்தார். மேலும் ஆகாஷையும் அவர் டிவிட்டரில் பின்தொடர தொடங்கியுள்ளார். 


இதனால் ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதற்காக பிரதமருக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள ஆகாஷ், இப்படி நடக்கும் என நினைத்துகூட பார்க்கவில்லை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.