புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலவும் கொரோனா நிலைமையைப் பற்றி விவாதிக்க மோடி தொடர்ந்து மாநில முதலமைச்சர்களிடம் பேசி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஞாயிற்றுக்கிழமை (மே 16) உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி  யூனியன் பிரதேச முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


ஆக்ஸிஜன் (Oxygen) சப்ளை, அனைவருக்கும் இலவச தடுப்பூசி மற்றும் தடுப்பூசி விரயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. 


கலந்துரையாடலின் போது, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மாநிலத்தில் கொரோனா வைரஸ் (Corona Virus) பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். "தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது, மாநிலத்தின் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்படுகிறது," என்று பாகேல் மேற்கோள் காட்டினார். 


நோய்த்தொற்றுகள் அதிகரித்து வரும் பகுதிகளில் கூடுதல் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என அவர் கூறினார். மாநிலத்திற்கு போதுமான அளவு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகேல் பிரதமரை வலியுறுத்தினார்.


ALSO READ | மத்திய அரசு வழங்கிய வெண்டிலேட்டர்கள் கிடப்பில் போடப்பட்டதா; தணிக்கைக்கு பிரதமர் மோடி உத்தரவு


முன்னதாக, மே 8 ம் தேதி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர்களுடன், மாநிலங்களில்  உள்ள COVID-19 நிலைமை குறித்து மறுஆய்வு செய்தார்.


மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில், 3.11 லட்சம் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. 25 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்புகளில் இது குறைந்த அளவாகும். 


ALSO READ | இந்தியாவில் Sputnik Lite தடுப்பூசி எப்போது; ரஷ்யா கூறியது என்ன 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR