ராய்பூர்: விரிவுபடுத்தப்பட்ட பிலாய் ஸ்டீல் தொழிற்சாலையினை பிரதமர் மோடி அவர்கள் திறந்துவைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி அவர்கள் இன்று சத்தீஸ்கர் விஜயம் செய்துள்ளார். இந்த பயணத்தில் இவர் பிலாய் பகுதியில் நவீனமயமாக்கப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பிலாய் ஸ்டீல் தொழிற்சாலையினை திறந்து வைக்க இருப்பதாக அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அவர் விரிவுபடுத்தப்பட்ட பிலாய் ஸ்டீல் தொழிற்சாலையினை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சிக்கு பின்னர் மாநிலத்தின் வரவிருக்கும் புதிய தலைநகரான நயா ராய்பூரில் உள்ள நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கின்றார். கடந்த இரண்டு மாத காலகட்டத்தில் இரண்டாவது முறையாக அவர் ராய்பூர் செல்வது குறிப்பிடத்தக்கது.


ராய்பூர் சென்றடையும் பிரதமர், நயா ராய்பூரில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைக்கின்றார். அதன் பின்னர் ராய்பூர்-ஜக்தல்பூர் விமான சேவையை துவக்கி வைக்கின்றார். இதனிடையே இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), பிலாய்-ல் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுகின்றார். இறுதியாக பிலாய் ஜெயந்தி மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றுகின்றார்.


ராய்பூரில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று காலை 10.40 மணியளவில் ராய்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மோடி அவர்கள் நயா ராய்பூர் ஸ்மார்ட் சிட்டிக்கு விஜயம் புரிந்தார். பின்னர் நகரின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.