பொய் கூறுவதை நிறுத்துங்கள் - மோடி மீது ராகுல் சாடல்
அரியானாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால்‘ ஒரே பதவி ஒரே பென்சன் ’திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் இன்னும் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்க ளை விடுதலை செய்யப்பட்டனர். நேற்று அரியானாவில் நடந்த இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளி த்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:- பிரதமர் பொய் சொல்வதை நிறுத்தவிட்டு ‘ ஒரே பதவி ஒரே பென்சன் ’திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த திட்டம் பணம் பற்றியது அல்ல. நமது வீரர்களின் மரியாதை பற்றியது. ராம்கிஷன் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் பேசி வரும் ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் வீரர்களின் ஓய்வூதியம் பற்றியது. ஒன் ரேங்க் ஒன் திட்டம் பற்றியதல்ல. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் வீரர்கள் போராடுகின்றனர். உண் மையில் இந்த திட்டம் அமல்படுத்தவில்லை" என அவர் கூறினார்.