ஜப்பான் செல்லும் வழியில் தாய்லாந்துக்கு திடீர் பயணம்- மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் ஜப்பான் செல்லும் வழியில் தனது பயணத்திட்டத்தில் திடீரென மாற்றம் செய்த பிரதமர் மோடி, தாய்லாந்தில் இறங்கினார்.
பாங்காக்: பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் ஜப்பான் செல்லும் வழியில் தனது பயணத்திட்டத்தில் திடீரென மாற்றம் செய்த பிரதமர் மோடி, தாய்லாந்தில் இறங்கினார்.
இதை தொடர்ந்து கிராண்ட் அரண்மனைக்குச் சென்ற மோடி, அங்கு சமீபத்தில் மறைந்த மன்னர் பூமிபால் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தாய்லாந்தில் நீண்ட காலம் மன்னராக ஆட்சிபுரிந்த பூமிபால் கடந்த மாதம் காலமானார்.
இன்று அங்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அங்கிருந்து ஜப்பான் புறப்பட்டு செல்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு மன்னர் அகிடிடோ, பிரதமர் ஷிண்டோ அபே ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். பின்னர், அந்நாட்டுப் புகழ்பெற்ற ஷிண்கன்சென் புல்லட் ரயில் மூலம் கோபே நகருக்குப் பயணிக்கிறார்.
மோடியின் இந்த ஜப்பான் பயணத்தின் போது இருநாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதோடு, வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது.