புல்பூல் சூறாவளி பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மம்தா பானர்ஜியிடம் கேட்டறிந்தார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்காளத்தின் கடலோரப் பகுதிகளில் புல்பூல் சூறாவளி பேரழிவை ஏற்படுத்திய ஒரு நாள் கழித்து, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிலைமையைப் பற்றி தொலைபேசியில் கேட்டறிந்தார். தனது தொலைபேசி உரையாடலின் போது, பிரதமர் மோடி, டி.எம்.சி தலைவருக்கு மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் உறுதி செய்தார்.


வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை காற்று வேகமுடன் வீசியது.


வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது. வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி புல்புல் புயல் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என வங்காளதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.


இது தொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புல்புல் புயல் மற்றும் கனமழையால் கிழக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்துள்ளேன். புயலால் ஏற்பட்டுள்ள சூழல் பற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் பேசியுள்ளேன். தேவைப்படும் அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.