‘உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது’: பவானி தேவிக்கு பிரதமர் ஆறுதல்
ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் பங்கேற்றார்.
Tokyo Olympics 2020: ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். இரண்டாவது சுற்றில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனோனுடன் மோதியதில், பவானி தேவி 7-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
அதை அடுத்து அவர், I am sorry என ட்வீட் செய்திருந்தார். மேலும் தனக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர், “நீங்கள் மிகச் சிறப்பாக் விளையாடினீர்கள், அது தன முக்கியம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் ஒரு அங்கம். உங்கள் திறமையை நினைத்து நாடு பெருமை கொள்கிறது” என பதில் ட்வீட் செய்திருந்தார்
மோடியின் ட்வீட்டுக்கு பதிலளித்த தேவி, "போட்டியில் தோல்வியடைந்தாலும் நீங்கள் எனக்கு ஆதரவாக ஊக்கமளிக்கிறீர்கள், இந்த தலைமை பண்பு, எனக்கு மிகவும் ஊக்க்கமளிக்கிறது. மேலும், கடினமாக உழைக்கவும், இந்தியாவுக்காக வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறவும் எனக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது" என்றார்.
ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR