மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முக்கிய முடிவு: PMO
கோவிட் -19 நெருக்கடியை சமாளிக்க போதுமான மருத்துவ பணியாளர்களை ஈடுபடுத்துவது குறித்து பிரதமர் மோடி மறுஆய்வு செய்தார்.
இந்தியா தற்போது கொடிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராடுகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கோவிட் -19 நெருக்கடியை சமாளிக்க போதுமான மருத்துவ பணியாளர்களை ஈடுபடுத்துவது குறித்து பிரதமர் மோடி மறுஆய்வு செய்தார். கொடிய வைரஸை எதிர்த்துப் போராட மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முக்கிய முடிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
தொற்று நோய் (Corona VIrus) இரண்டாவது அலையை சமாளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், மருத்துவ பயிற்சியாளர்களை அவர்களின் பேராசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் பயன்படுத்துவதை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது இன்டர்ன்ஷிப் காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றும் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் தொபைபேசி, வீடியோ கானபரென்சிங் மூலம் கொரோனா சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கொரோனா நோயாளிகளுக்கு இரவு பகலாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பணிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மருத்துவத் துறையில் நிபுணத்துவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லாத பணிகளில், தன்னார்வர்களை ஈடுபடுத்துவது குறித்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, மேலும் கூறினார்.
ALSO READ | இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்: SII
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR