இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் முதல் துப்பாக்கி வரை ஊழல் தான் என காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ராணுவ படைகளுக்கு ஜீப் வாங்கியது முதல் ஹெலிகாப்டர் வாங்கியது வரை ஊழல் தான் நிலைகொண்டிருந்தது என காங்கிரஸ் ஆட்சியின் மீது பிரதமர் மோடி இணையதளத்தில் குற்றங்சாட்டியுள்ளார். 


நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சமூக இணையதளங்கள் மூலம்  மோடி பிரசாரம் செய்து வருகிறார்.  


அந்த வகையில் நேற்றைய தினம் அவர் தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரையில்,  வாக்களிப்பவர்கள் கடந்த கால ஆட்சியை, நினைவில் வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும், குடும்ப அரசியல் நடத்துகிற கட்சிகள், ஊடகங்கள் சுதந்திரமாகவும், துடிப்பாகவும் செயல்படுவதை வசதியாக கருதுவது கிடையாது. பேச்சு சுதந்திரத்தை குறைத்தது தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த முதல் அரசியல் சாசன திருத்தம். 


1947-ஆம் ஆண்டிற்கு பின்னர் காங்கிரஸ் அரசில் பாதுகாப்புத்துறையில் பல ஊழல்கள் அரங்கேறி உள்ளன. படைகளுக்கு ஜீப் வாங்கியது முதல் துப்பாக்கி, நீர்மூழ்கி கப்பல், ஹெலிகாப்டர் வாங்கியது வரை எல்லாவற்றிலும் ஊழல்தான். பயங்கரவாதிகள் மீது நமது படையினர் தாக்குதல் நடத்துகிறபோது, காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சட்டுகின்றனர். பயங்கரவாதிகள் மீது நமது விமான படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதன்மீதும் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. அந்தக் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் என்பதே கிடையாது. 


கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர ஒருவர் விரும்பினால், அவரை தூக்கி எறிந்து விடுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.