பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நிரவ் மோடி மற்றும் மெகுல் சோஷிக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக நடைப்பெற்ற சோதனையில் 10 கணினி மற்றும் பத்திரங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள PNB ஊழல் வழக்கு தொடர்பாக நிரவு மோடி-க்கு சொந்தமான பகுதிகளில் (மும்பை, புனே, அவுரங்காபாத், தானே, கொல்கத்தா, டெல்லி, ஜம்மு, லக்னோ, பெங்களூரு, சூரத்) 38 இடங்களில் சோதனை இன்றும் 5-வது நாளாக சோதனை நடத்ததப்பட்டது.  


இந்த சோதனையின் போது கூடுதலாக ரூ. 22 கோடி அளவிலான வைரங்கள், தங்கம், பணம் மற்றும் விலை மதிப்புமிக்க கற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


அமலாக்கப்பிரிவின் சோதனையில் இதுவரையில் சிக்கிய பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5,716 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதனையடுத்து நிரவ் மோடி தப்பிபதற்கான சாத்தியகூறுகள் ஏதும் இல்லாதவாறு அமலாக்கத்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வரும் பிப்.,23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நிரவ் மோடி மற்றும் மெகல் சோஷிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது!