CAA Protest: லக்னோவில் வெடித்தது போராட்டம்; வாகனங்களுக்கு தீ வைப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து லக்னோவில் வெடித்தது போராட்டம். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் தடியடியை பயன்படுத்தி உ.பி. போலீசார்.
லக்னோ: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act) எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் போரட்டக்கரார்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். அதில் லக்னோவில் (Lucknow) ஆர்ப்பாட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. லக்னோ ஹஸ்ரத்கஞ்ச், தாகுர்கஞ்ச் மற்றும் பல இடங்களில் வாகங்களுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. லக்னோவில், பரிவர்த்தன் சவுக், கத்ரா மற்றும் ஹஸ்ரத்கஞ்ச் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துள்ளது. போலீஸ் வாகனங்கள், பேருந்துகள் உட்பட பல வாகனங்களில் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
லக்னோவில் மாதேகஞ்ச் பகுதியில் போராட்டக்காரர்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் சாவடியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அதே நேரத்தில், காவல்துறையினர் சோதனைச் சாவடிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் தீ வைத்தனர். இதனுடன். பல இடங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது என தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் போலீசார் வீசியுள்ளனர். போலீஸ் படை மீது மக்கள் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கத்ரா பகுதியில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் போலீசார் கடுமையான் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் வன்முறை போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதால், அரசு நிர்வாகம் முழு மாநிலத்திலும் 144 தடை சட்டத்தை விதித்துள்ளது. இந்த காலகட்டத்தில், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவை மாநிலத்தில் எங்கும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வதந்திகளை பரப்ப யாரும் முயற்சிக்கக் கூடாது என்று உத்தரபிரதேச டிஜிபி ஓ.பி.சிங் கூறினார். வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்க வேண்டாம் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும் என்று டிஜிபி முறையிட்டார். இல்லையெனில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
தலைநகரம் டெல்லியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். போரட்டத்தை அடுத்து பராகம்பா, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜசோலா விஹார் ஷாஹீன் பாக், முனீர்கா, லால் குயிலா, ஜமா மஸ்ஜித், சாந்தினி சௌக், விஸ்வவித்யாலயா, படேல் சௌக், லோக் கல்யாமான், ITO, பிரகதி மைதானம், மத்திய செயலகம், கான் சந்தை, வசந்த் விஹார் மற்றும் மண்டி மாளிகை ஆகிய மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மெட்ரோ நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்று இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மீது டிசம்பர் 15 அன்று டெல்லியில் எதிர்ப்புக்கள் அதிகரித் துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறை ஆர்ப்பாட்டங்கள் காணப்பட்ட நிலையில், தேசிய தலைநகரில் போக்குவரத்து மற்றும் மெட்ரோ நிலையங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடந்த சில நாட்களாக தொடர்கின்றன.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.