ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இந்துத்வ சித்தாந்தத்தை சிவசேனா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி கூட்டாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மூன்று கட்சிகளின் தலைவர்கள் - சிவசேனா-NCP-காங்., இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்துவார்கள். ஆறு அமைச்சர்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கீடு விரைவில் செய்யப்படும் ”என்று மகாராஷ்டிரா முதல்வர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.


மேலும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இந்துத்வ சித்தாந்தத்தை சிவசேனா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என மகாராஷ்ட்ரா முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசிடமிருந்து, பல விஷயங்களை தான் கற்றுக்கொண்டதாகவும், அவருக்கு தான் எப்போதுமே நல்ல நண்பராக விளங்குவேன் எனவும் தெரிவித்தார். சிவசேனாவுடன் பாஜக இணக்கமாக இருந்திருந்தால், கசப்பான அனுபவங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில், நான் ஒருபோதும் அரசாங்கத்திற்கு துரோகம் இழைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.


மகாராஷ்டிரா சட்டமன்றம் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோல் மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகாடி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்ற ஒரு நாள் கழித்து சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முக்கியமான இலாகாக்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்று கூட்டணி பங்காளிகளிடமிருந்தும் இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், சிவசேனாவுக்கு முதல்வர் உட்பட 16 அமைச்சர்கள் இருப்பார்கள், NCP-க்கு 15 அமைச்சர்கள் பதவி கிடைக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தில் காங்கிரசுக்கு 12 அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.


முன்னதாக மகாராஷ்டிரா மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.