எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியும் காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் செப்டம்பர் 12 அன்று புதுதில்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு சென்று இந்தியாவின் இரங்கலைத் தெரிவித்தார். இந்தியாவும் செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சியின் 70 ஆண்டுகளில், இந்தியா-இங்கிலாந்து உறவுகள் பரிணாம வளர்ச்சியடைந்து, செழித்து, வலுப்பெற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் தலைவராக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார். பிரிட்டிஷ் ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இறந்தார்.
மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!
இங்கிலாந்து ராணியின் மறைவிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ஆம் தேதி காலமானதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். இறுதிச் சடங்கு செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும். பிறகு, ராணி எலிசபெத் II கோட்டையின் கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார்.
மேலும் படிக்க |மன்னர் சார்லஸின் வீங்கிய விரல்கள்... மருத்துவர்கள் கூறுவது என்ன..!!
மேலும் படிக்க | பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ