உஜ்ஜெய்ன்: 2019 லோக் சபா தேர்தல் (lok sabha elections 2019) பிரசாரத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி என் தந்தையை அவமானப்படுத்தி வருகிறார். ஆனால் நான் அவரது பெற்றோர்களை அவமதிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜெய்ன் பகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் மார்பு 56 அங்குலம் என்றால், காங்கிரஸ் கட்சியின் இதயம் 56 அங்குலங்கள். நரேந்திர மோடி என் தந்தையை அவமானப்படுத்துகிறார். என் பாட்டி, என் தாத்தாவைப் பற்றி பேசுகிறார். 


நான் செத்துவிடுவேன். ஆனால் நரேந்திர மோடியின் பெற்றோர்களை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். ஏனென்றால் நான் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவன் அல்ல. நான் காங்கிரஸ் கட்சியின் பின்புலத்தில் இருந்து வந்தவன். எனவே நான் வெறுக்கத்தக்க வகையில் பேசக்கூடியவனாக இருக்க மாட்டேன். 


நான் அன்போடு அனைத்து பேசுவேன். நரேந்திர மோடியை அன்பால் தோற்க்கடிப்போம். எல்லோரும் நம்முடையவர்கள், நாம் யாரையும் வெறுக்கவில்லை. நரேந்திர மோடிக்கு 56-அங்குல மார்பு என்றால்... காங்கிரசுக்கு 56 அங்குல இதயம் இருகிறது எனக் ராகுல்காந்தி கூறினார்.