புதுடெல்லி: பாகிஸ்தானுடன் வங்க தேசம் நடத்திய போரின் 50வது வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டுள்ள வங்கதேச பயணத்தின் போது டாக்காவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க 'ராம்னா காளி' கோவிலுக்கு செல்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகலாயர் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயில், வங்காளதேச விடுதலைப் போரைத் தடுக்கும் முயற்சியில் 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. பாகிஸ்தான் இராணுவத்தின் "Operation Searchlight" என்ற நடவடிக்கையின் கீழ் அழிக்கப்பட்டது. அதில் இது அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த பலர் உட்பட லட்சக்கணக்கான உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டனர்.


ALSO READ | மத்திய அரசின் சார்தாம் சாலை திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


2017ஆம் ஆண்டு அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் வங்கதேசப் பயணத்தின் போது, ​​கோயிலை புனரமைக்க இந்தியா உதவும் என்று அறிவிக்கப்பட்டது. கோயில் அழிக்கப்படுவதற்கு முன், டாக்காவின் முக்கிய மத மற்றும் கலாச்சார பாரம்பரியமாக இருந்தது. மார்ச் 7, 1971 அன்று பங்களாதேஷின் தந்தை ஷேக் முகிபுர் ரஹ்மானின் நடத்திய உரையின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களில் பின்னணியில் கோவிலை காணலாம்.


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (President Ram Nath Kovind) டிசம்பர் 15 முதல் 17 வரை டாக்காவில் இருப்பார். டிசம்பர் 16 அன்று நடைபெறும் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த அணிவகுப்பில் இந்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 122 பேர் கொண்ட முப்படை வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.


பயணத்தின் முதல் நாளில், சவாரில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்துகிறார். COVID-19 தொற்றுநோய் பரவல் தொடங்கியட்தில் இருந்து, குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.


இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக வங்க தேசத்திற்கு பயணம் செய்தார். 2021 பங்களாதேஷின் சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டாகும். இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 50 ஆண்டுகள் மற்றும் வங்க தேசத்தின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நூற்றாண்டு ஆகியவற்றைக் குறிக்கிறது.


ALSO READ | Omicron: பகீர் தகவல்! ‘இந்த’ நாட்டில் ஓமிக்ரானால் 75000 பேர் இறக்கக்கூடும்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR