புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று டெல்லியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 75 வயதாகும் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக 2017 ஜூலை 25ம் நாளன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை நோய் நீக்க அறுவை சிகிச்சை நடந்தேறியது என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் இன்று காலை (ஆகஸ்ட் 19, 2021) புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (Army Hospital (Referral & Research)) கண்புரை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
President Ram Nath Kovind underwent cataract surgery at Army Hospital (Referral & Research), New Delhi today morning. The surgery was successful and he has been discharged from the hospital: Ajay Kumar Singh, Press Secretary to the President pic.twitter.com/DQcxf0Wnf8
— ANI (@ANI) August 19, 2021
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தபின் மருத்துவமனையில் இருந்து குடியரசுத் தலைவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கண்புரை (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவுதம் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் எளிமையாக சொல்லலாம். இயல்புநிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை கண்புரைகள்.
இவை விழித்திரையில் (retina) விழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதியவர்களுக்கு ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு, கிட்டப்பார்வை கூடுதலாகி கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணலாம். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறைந்துவிடும்.
கண்புரை முற்றிவிட்டால், பார்வையில் குறைவோ பார்வை முற்றிலும் பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் ஏற்படும் பாதிப்புக்கு இடையே கால இடைவெளி இருக்கும்.
Also Read | இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை
கண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றன. நெடுங்காலமாக கண்களில் புற ஊதாக்கதிர்கள் படுவது, சர்க்கரை நோயின் தாக்கம், ரத்த அழுத்த நோயின் தாக்கம், காயம் ஏற்படுவது போன்றவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவதற்கு காரணம் குடும்பத்தின் மரபுவழியினால் ஏற்படும்.
கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் புரை உள்ள லென்ஸ் நீக்கப்பட்டு, ஒளிபுகும் தன்மையுள்ள IOL லென்ஸ் (Intra Ocular Lens) பொருத்தப்படும். கண்புரைக்கு அறுவைசிகிச்சை செய்துவிட்டால், பார்வை மீண்டும் தெளிவாகிவிடும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 75 வயது ஆவதால், இது வயது மூப்பின் காரணமாக இயல்பாக ஏற்படும் கண்புரையாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.
Also Read | கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்! திடுக்கிடும் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR