இந்தியா பயணத்தின்போது குஜராத்தின் சபர்மதி ஆற்றங்கரையை ஜனாதிபதி டிரம்ப் பார்வையிட உள்ளதாக விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகையின் போது குஜராத்தின் சபர்மதி ஆற்றங்கரை பார்வையிட வருவார் என்று முதல்வர் விஜய் ரூபானி புதன்கிழமை வடக்கு டெல்லியின் சாஸ்திரி நகரில் தேர்தல் பேரணியில் உரையாற்றினார். 


70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி டெல்லி வந்துள்ளார். வடக்கு டெல்லியான சாஸ்திரி நகரில் பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது.. அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அவரது இந்திய பயணத்தின் போது குஜராத் மாநிலத்திற்கும் வருகை தருகிறார் என அவர் தெரிவித்தார். 


மேலும், குஜராத் முதல்வர், "முழு ஆசியாவிலும், சபர்மதி நதி பிரதமர் நரேந்திர மோடியால் உறுதி செய்யப்பட்ட தூய்மையான நதியாக மாறியுள்ளது. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் சபர்மதி ஆற்றை பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தனர். இவர்களை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் அங்கு வர உள்ளார்" என்று கூறினார்.


"அமெரிக்க அதிபர் டிரம்பும் பிப்ரவரியில் (இந்தியாவுக்கு) வருவார், அவரும் ஆற்றங்கரைக்கு வருவார்" என்று ரூபானி கூறினார், ஆனால் தேதிகளை குறிப்பிடவில்லை. இந்த மாத தொடக்கத்தில், டிரம்ப் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கான தேதிகளை இறுதி செய்ய இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. டிரம்பின் இரண்டு நாள் பயணம் பிப்ரவரி 24-26 அன்று நடைபெறலாம். 


கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை பிரதம விருந்தினராக வருமாறு இந்தியா டிரம்பை அழைத்திருந்தது, ஆனால் திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக அவரால் வர முடியவில்லை. அமெரிக்க அரசாங்க வட்டாரங்களின்படி, எந்தவொரு உயர் மட்ட பயணத்தின் போதும் காஷ்மீர் பிரச்சினை எழுப்பப்படாது, ஏனெனில் வாஷிங்டன் இந்தியாவின் இறையாண்மையை மதிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.