ஜனாதிபதி தேர்தல் 2017: சோனியாவுடன் பாஜக குழு ஆலோசனை
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தேசிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் முத்த மந்திரிகளான ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழு எதிர்க்கட்சியினரை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை, அவரது இல்லத்தில் சந்தித்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையின் போது உடன் இருந்தனர்.