Presidential Election 2022: தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று திரௌபதி முர்முவை சிரோமணி அகாலி தளம் ஆதரிக்கும் என்று அறிவித்தது. குடியரசுத் தலைவர் பதவிக்கு திரௌபதியின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் "தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்" என அறிவித்துள்ளார்.


இதுக்குறித்து பேசிய சுக்பீர் சிங் பாதல், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சியிடம் ஆலோசிக்கப்பட்டது. அரசியல் வேறுபாடுகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் என்டிஏ வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் விஷயத்தில் பாஜகவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் எங்கள் கட்சி திரௌபதி முர்முவை ஆதரிக்கும் என்று அவர் கூறினார். நாங்கள் காங்கிரஸுடன் ஒருபோதும் செல்ல மாட்டோம் என்றார். சீக்கிய சமூகத்திற்கு காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது என்றார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்குமாறு திரௌபதி முர்மு மற்றும் ஜேபி நட்டாவிடம் இருந்து இன்று தனக்கு அழைப்பு வந்ததாக சுக்பீர் பாதல் தெரிவித்தார்.


மேலும் படிக்க: Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி


ஜனாதிபதி பதவிக்கு முர்முவின் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, திரௌபதி முர்மு தனிப்பட்ட முறையில் பல்வேறு அரசியல் கட்சிகளை தொடர்பு கொள்ளத் தொடங்கினார். 


ஒடிசாவைச் சேர்ந்த பிஜேடியும், ஆந்திராவில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் ஏற்கனவே முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஒடிசா முதல்வரும், பிஜேடி தலைவருமான நவீன் பட்நாயக், தனது அனைத்து எம்எல்ஏக்களையும் கட்சி வேறுபாடு இல்லாமல் முர்முவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


இதுவரை முர்முவை ஆதரித்தவர்களில் ஜனதா தளம் (எஸ்), ஜத்னா தளம் (யு), எல்ஜேபி, பிஎஸ்பி, எல்ஜேபி ஆகிய கட்சிகளும் அவருக்கு ஆதரவாக வந்துள்ளன. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் (SKM) முர்முவுக்கு ஆதரவாக உள்ளது. சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கும் இதனை அறிவித்துள்ளார். அதே நேரத்தில், ஜார்க்கண்ட் முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடந்த காலங்களில் சந்தித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னதாக பாஜக எங்களிடம் பேசியிருந்தால் திரௌபதி முர்முவை ஆதரித்திருப்போம் என்றார். பழங்குடியின பெண்ணை வேட்பாளராக தருகிறோம் என்று பாஜக தெரிவித்திருந்தால் நாங்கள் ஆதரித்திருப்போம். ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.


மேலும் படிக்க: குடியரசுத் தலைவர் தேர்தல் : யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe