உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆகியோர் அஸி காட் பகுதியில் படகு சவாரி செய்து வருகின்றனர். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனதா சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தற்போது வாரணாசிக்கு வருகை புரிந்துள்ளார். வாரணாசி வந்தடைந்த மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று வரவேற்றார். 


இதற்கு முன்பு, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாடு, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் முயற்சியில் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டை பிதமர் மோடி தொடங்கி வைத்தார். 


பாரதிய ஜனதா, உத்தரப்பிரதேசம், வாரணாசி, சட்டப்பேரவை, பிரதமர் மோடி, Bharatiya Janata, Uttar Pradesh, Varanasi, Legislative Assembly, Prime Minister Modi,


அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி:- நல்ல மாற்றத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், சமூக நீதி மட்டுமே நமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார். 


ஆரோக்கியமான போட்டியும் கூட்டாட்சியும் தான் நாட்டின் பலம். அதிகாரிகளும் மக்களும் வளர்ச்சிக்காக பாடுபடும் போது அதன் முடிவு பெரிதாக இருக்கும். 


மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சிக்கான அளவு கோல் வலுவாக உள்ள சில மாவட்டங்கள் உள்ளன. இவைகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டு நலிவடைந்த மாவட்டங்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றது குறிபிடத்தகக்து.


பாரதிய ஜனதா, உத்தரப்பிரதேசம், வாரணாசி, சட்டப்பேரவை, பிரதமர் மோடி, Bharatiya Janata, Uttar Pradesh, Varanasi, Legislative Assembly, Prime Minister Modi,