பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (ஏப்ரல் 09) காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தலைவர்கள் புத்திசாலித்தனமாக பணியாற்றி இருந்தால் இன்று பாக்கிஸ்தானை உருவாகி இருக்க முடியாது எனக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, 


காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு புத்திசாலித்தனமாக பணியாற்றியிருந்தால், 1947ல் பாக்கிஸ்தான் உருவாகி இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் பாக்கிஸ்தானிய மொழியும் ஒன்று தான். 


தேசிய மாநாட்டு தலைவர் ஒமர் அப்துல்லாவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய மோடி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு தனி பிரதம மந்திரி கோரிக்கை வைக்கிறார்கள் என்று மோடி குற்றம் சாட்டினார். அதேவேளையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை தாக்கி பேசிய மோடி, மராட்டிய மக்கள் அத்தகைய கருத்தை ஆதரிக்கும் என்சிபி கட்சியை எப்படி ஆதரிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார். 


பா.ஜ.க.வின் கீழ் புதிய இந்தியாவின் கொள்கையானது, பயங்கரவாதத்தை தங்கள் வீட்டிலேயே புகுத்து அவர்களை அழிப்பதே ஆகும் என்றார். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு விமானத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்த இராணுவ வீரர்களின் துணிச்சலை பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இராணுவத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெறப் போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. "பயங்கரவாதிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது" பாகிஸ்தான் முடிவை நிறைவேற்றவே சிறப்பு சட்டம் முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நபர்களை அவர் விடுவிக்க விரும்புகிறார் எனவும் பிரதமர் மோடி கூறினார்.