வாஜ்பாயி சிலை திறப்பு விழாவிற்கு லக்னோ செல்லும் மோடி!
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை திறப்பதற்காக பிரதமர் மோடி 25 டிசம்பர் 2019 அன்று லக்னோவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை திறப்பதற்காக பிரதமர் மோடி 25 டிசம்பர் 2019 அன்று லக்னோவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை 25 டிசம்பர் 2019 அன்று லக்னோவில் உள்ள லோக் பவனில் திறந்து வைக்கும் மோடி வரவையொட்டி லக்னோவில் மிகவும் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது லக்னோ வருகை பிற்பகல் 2.30 மணிக்கு இருக்கும் எனவும், டெல்லிக்கு மாலை 5 மணியளவில் திரும்புவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு ஆனது பாரதிய ஜனதா கட்சியின் (BJP) இணை நிறுவனர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளோடு ஒத்துப்போகிறது. இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. முன்னதாக உத்திரபிரதேச மூத்த அதிகாரிகள் செவ்வய் அன்று நிகழ்ச்சி நடைப்பெற்ற இடத்தை ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது.
மேலும் ஒரு ஸ்னிபர் நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பாளர்களின் உதவியுடன் இடம் சுத்திகரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிரம்மாண்டமான வெண்கல சிலையை பிரதமர் மோடி பிற்பகல் 3:30 மணியளவில் திறக்க இருக்கிறார். வெண்கல உலோகத்தால் செய்யப்பட்ட இந்த சிலை 25 அடி உயரம் கொண்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து பிரதமர் மோடி, அடல் பிஹாரி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவார் எனவும் தெரிகிறது.
அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மாலை 3 மணியளவில் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் ஹெலிகாப்டர் மூலம் லா மார்டினியர் பாய்ஸ் பள்ளி மைதானத்தை அடைவார் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர், லோக் பவன் அடைவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடல் பிஹாரி சிலையை அவர் திறக்கும் நிகழ்வில், 25 நிமிட உரை நிகழ்த்துவார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பீன் படேல் ஆகியோர் மற்ற மாநில அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் லக்னோவில் மூன்று நாள் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் முக்கிய பகுதியாக டிசம்பர் 24-ஆம் தேதி தேசியவாதம் மற்றும் தேசியவாதம் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் பற்றிய கருத்தரங்கு நடைபெறுகிறது. கருத்தரங்கில் RSS சிந்தனையாளர் ராகேஷ் சின்ஹா மற்றும் துணை முதல்வர் தினேஷ் சர்மா ஆகியோர் கலந்து கொள்வார்கள். விதான சபா சபாநாயகர் ஹ்ரிடே நாராயண் தீட்சித் தலைமை தாங்குவார். தேசிய கவிஞர் மாநாடு டிசம்பர் 25 அன்று, விழாவின் கடைசி நாளில் நடைபெறும்.