கங்கை மீட்பு குழு மிஷன் கங்கே-வுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
கங்கை நதியை தூய்மைப்படுத்த முன்வந்துள்ள 40 ஆர்வமுள்ள நபர்கள் கொண்ட குழுவினை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்!
கங்கை நதியை தூய்மைப்படுத்த முன்வந்துள்ள 40 ஆர்வமுள்ள நபர்கள் கொண்ட குழுவினை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்!
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஏறத்தாழ 40 ஏராளமான ஆர்வமுள்ள நபர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நபர்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று சந்தித்தார்.
அனுபவம் வாய்ந்த இந்த குழு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிய 8 அனுபவுள்ள வீரகளையும் கொண்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்ணான திருமதி. பச்சேந்திரி பால் இந்த குழுவினை தலைமை தாங்கி வழிநடத்தி வருகின்றார்.
யூனியன் அரசாங்கத்தின் "நாமமி கங்கே" பிரச்சாரத்தால் ஊக்கமளிக்கப்பட்ட இந்த பயணம், "மிஷன் கங்கே" என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது. ஒரு மாத பயணத்தை முடித்துள்ள இந்த குழு ஹரித்வாரில் இருந்து பாட்னா வரை, ஆற்றில் பிக்நோர், நரோரா, ஃபுருகபாபாத், கான்பூர், அலாகாபாத், வாரணாசி மற்றும் புக்ஸார் அகிய பகுதிகளை கடந்து வந்துள்ளது.
இந்த ஒன்பது நகரங்களில் பயணத்தை முடித்துள்ள இந்த குழு, கங்கை நதியை சுத்தமாக வைத்திருப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர் மேலும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர்.
மிஷன் கங்கே குழுவோடு சந்திப்பு நடத்திய பிரதமரி மோடி அவர்கள்... இந்த முயற்சியை மேற்கொள்வதற்காக குழு உறுப்பினர்களை பாராட்டினார். கங்கை நதியின் சுத்தம் மற்றும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வினை பள்ளி மாணவர்களின் வாயிலாக கொண்டுச்செல்வது நல்லது எனவும் வலியுறுத்தியுள்ளார்!