PM Modi Slams India Alliance: பிரதமர் மோடி கேரளாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 17, புதன்கிழமை) காலை குருவாயூர் கோவில் சென்று தரிசனம் மேற்கொண்டார். அதன்பிறகு ரூ. 4,000 கோடி அளவிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு மக்கள் மத்தியில் பேசும் போது, "வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை காங்கிரஸ் கொடுத்தது. ஆனால் நாங்கள் அந்த பணியை செய்துள்ளோம் என்றார். நமது பணியின் தாக்கம் நாட்டின் வளர்ச்சியில் தெரிகிறது. காரணம், பாஜக ஆட்சியில், 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு உள்ளனர்" எனக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு -பிரதமர் மோடி


பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில், பாஜக அரசின் கொள்கைகளின் விளைவு நாட்டில் தெரியும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வந்துள்ளது. நமது நாட்டில், ஐந்து தசாப்தங்களாக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை கொடுத்தன. ஆனால் பாஜக ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பது பெரிய விஷயம் என்றார்.


கேரள மக்கலின் அன்பும், பாசமும் வியப்பில் ஆழ்த்தியது -பிரதமர் மோடி


இந்தியாவில் விரைவான வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கான தெளிவான பார்வையை கொண்ட ஒரே கட்சி பாஜக என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், கேரள மக்கள் தன் மீது காட்டும் அன்பும், பாசமும் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றார்.


மேலும் படிக்க - ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீராம ஜோதியை ஒளிரச் செய்யுங்கள் -பிரதமர் மோடி சிறப்பு வேண்டுகோள்


கேரளாவில் பாக்கியம் கிடைத்தது


இன்று காலை குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. கேரளாவின் வளர்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்றார். அதாவது அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோயிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது என்றார்.


வெற்றிக்கான ஃபார்முலாவை கூறிய பிரதமர் மோடி


ஒவ்வொரு சாவடியிலும் வெற்றி பெறுவோம் என்பதே நமது தீர்மானமாக இருக்க வேண்டும் என்றார். எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் வெற்றி பெற்றால், கேரளாவில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெறலாம். ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


தலை வணங்குகிறேன் -பிரதமர் மோடி


பாஜக தொண்டர்களிடம் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆகியவற்றின் சாதனைகள் ஊழலின் வரலாற்றுக்கு ஒத்ததாக உள்ளது என்றார். இதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். இந்தியாவுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்கும் உங்கள் முன் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.


மேலும் படிக்க - ராமர் நல்லாட்சியின் அடையாளம். ராமராஜ்ஜியத்தில் மக்களே ராஜாக்கள் -பிரதமர் மோடி


'மோடி கி உத்தரவாதம்' பிரச்சாரம்


கேரளா மக்கள் அனைவரையும் 'விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா'விற்கு அழைத்து வர வேண்டும். 'மோடி கி உத்தரவாதம்' பிரச்சாரத்தில் அவர்களை ஈடுபடுத்த உதவ வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் கூறினார்.


அனைத்து வீடுகளிலும் விளக்குகளை ஏற்றுங்கள் -பிரதமர்


வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி, அனைத்து வீடுகளிலும் விளக்குகளை ஏற்றுமாறு கேரள மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதே நேரத்தில், உங்கள் கோவில்களில் தூய்மை பிரச்சாரங்களை நடத்துங்கள் எனவும் சிறப்பு வேண்டுகோள் வைத்தார்.


மேலும் படிக்க - "மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ