கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் வகையில் புதிய ₹2000 நோட்டுகளை மிகக்குறைந்த அளவு மட்டுமே அச்சடிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ₹1000, ₹500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நோட்டுகளுக்கு பதிலாக ₹2000, ₹500 புதிய நோட்டுகள் மத்திய அரசு அறிமுகம் செய்தது.
 
மக்களின் தேவைக்காக ₹2000 நோட்டுகள், கடந்த இரண்டு வருடங்களாக கணிசமான அளவு அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கருப்பு பணம் பதுக்குதல் நடவடிக்கைகளை தடுக்க ஏதுவாக இந்த ₹2000 நோட்டுகளை மிக குறைந்த அளவில் அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


சமீபத்தில் ₹2000 நோட்டுகள் மீண்டும் செல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இந்த தகவல் குறித்து மக்களிடம் தெளிவு கொண்டுவர ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இதுதொடரப்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். 


கடந்த மார்ச் மாதம் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் மதிப்புகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ₹2000 நோட்டுகளாக உள்ளது. இது மொத்த பணத்தில் 37% என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ₹500 ரூபாய் நோட்டுகள் ₹7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43% ஆகும்.