காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கும்பமேளாவிற்குச் செல்லும் பிரியங்கா காந்தி அங்கே கங்கையில் புனித நீராடலுக்குப் பிறகு தனது அரசியல் பணியைத் தொடங்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இந்தநிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறது. மற்றொரு புறம் கூட்டணி குறித்து பேச்சு வாரத்தை நடைபெற்று வருகிறது. 


இதனையடுத்து ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் ஒரு பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வறிவிப்பு வெளியான பிறகு பிரியங்காவின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.


இந்நிலையில் பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 4 அன்று பிரயக்ராஜ் செல்கிறார். அங்கு கங்கையில் புனித நீராடிவிட்டு அதன் பின்னரே அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஒரு வேளை பிப்ரவரி 4-ம் தேதி புனித நீராடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பிப்ரவரி 10 ஆம் தேதி பஸந்த் பஞ்சமி மற்றும் 3-வது ஷாஹி ஸ்னானம் ஆகிய சடங்குகளின்போது கலந்துகொள்வார்கள். இதேபோன்று 2001-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி கும்பமேளா சென்று புனித நீராடினார்.


இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதம், கும்பமேளா நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகே பிரியங்கா, லக்னோவில் ராகுலுடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.