பிரியங்கா காந்தி உ.பி தேர்தலில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரியங்கா களமிறங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரசியலில் களமிறங்குவது குறித்த இறுதி முடிவை பிரியங்கா தான் எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பிரியங்கா இதுவரை சோனியா, ராகுலுக்கு ஆதரவாக தான் பிரசாரம் செய்து வந்தார். உத்தர பிரதேஷ் தேர்தலை கருத்தில் கொண்டு பிரியங்காவை மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.,வின் நரசிம்ம ராவ் கூறுகையில்:- பிரியங்கா அரசியலில் களமிறங்குவது ராகுலின் தோல்வியை காட்டுகிறது. ராகுல், சோனியாவை மக்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர். பிரியங்காவை களமிறக்கி காங்கிரஸ் கட்சி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.