பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக் ஊழியர்கள் அவதூறான தகவல்களை பதிவுசெய்கின்றனர் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு மத்திய மந்திரி கடிதம் எழுதியுள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகநூல் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad) செவ்வாய்க்கிழமை மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் (Mark Zuckerberg) தெரிவித்தார். பேஸ்புக் இந்தியா நிறுவனம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது. பாஜக, பேஸ்புக், வாட்ஸ் ஆப் இடையேயான தொடர்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து பேஸ்புக் இயக்குநர் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில்... "பிரதமர் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் மீது, பேஸ்புக்கில் தொடர்ந்து அவதுாறு பரப்பப்படுகிறது. இதற்கு, இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முக்கிய அதிகாரிகளே துணை போகின்றனர். பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த அதிகாரிகளின் இந்த செயல்களுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.


ALSO READ | மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கு கடவுளைக் குறை கூற வேண்டாம்: மையத்திற்கு ப.சிதம்பரம் பதிலடி


கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தலின் போது வலதுசாரிகளின் பேஸ்புக் பக்கங்கள் திட்டமிட்டே டெலீட் செய்யப்பட்டன.  இது தொடர்பாக பல முறை புகார்கள் அனுப்பியும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், உண்மைக்கு மாறான, குறிப்பிட்ட செய்திகள் மட்டும் வெளியில் கசிய விடப்படுகின்றன. இந்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்து புரளி கிளப்புவது கண்டனத்திற்குரியது. சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் விஷமிகள், வன்முறைக்கென ஆட்களை நியமித்து, பேஸ்புக் வாயிலாக, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.


இந்திய அரசியலை ஸ்திரமற்றதாக ஆக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், என்பதற்கான பல உதாரணங்கள் உள்ளன. எனவே, இத்தகைய குறைபாடுகளை நீக்கி, இந்தியாவில் சமூகம் மற்றும் பல்வேறு மதங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், நாடு சார்ந்த சமூக விதிமுறைகளை, பேஸ்புக் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இந்தியாவின் அரசியல் பிரச்சனைகளில் பேஸ்புக் இந்தியா நிறுவன பணியாளர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் ரவிசங்கர் பிரசாத், அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.