தன் மீதான குற்றச்சாட்டை பிரதம்ர மோடி நிருபிக்கவிட்டால் மக்களின் முன் 100 தோப்புக்கணம் போட தயரா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தன்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும் என பிரதமருக்கு சவால் விடுத்தார்.


மேற்கு வங்காளம் மாநிலத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.


இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு இந்த சவாலை விடுத்துள்ளார்.



மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசியதாவது., பிரதமர் மோடி அவர்களே, நிலக்கரி சுரங்க ஊழலில் எனக்கு பங்குண்டு என நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும். என் மீதான குற்றச்சாட்டை நீங்கள் நிரூபித்து விட்டால், 42 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வாபஸ் பெற்று விடுகிறேன்.


அப்படி இல்லையென்றால், பொதுமக்கள் மத்தியில் நீங்கள் காதை பிடித்துக் கொண்டு 100 முறை தோப்புக்கரணம் போட தயாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.