மகாராஷ்டிராவில் நாக்பூரின் நீதிமன்ற வளாகத்தில் ஒரு துணை வழக்கறிஞர், நீதிபதியை ஓங்கி அறைந்துள்ளார். இந்த சம்பவம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் ஏழாவது மாடியில் ஒரு லிப்ட் வெளியே புதன்கிழமை மதியம் நடந்துள்ளது,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து சதானி போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் சுனில் பாண்டே கூறியது, மூத்த நீதிபதி கே. ஆர் தேஷ்பாண்டே அவர்கள், நான் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வரும் உதவி வழக்கறிஞர் டி. எம். பராதே என்னை ஓங்கி அறைந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒரு வழக்கில் நான் அளித்த தீர்ப்பின் காரணமாக என்னை தாக்கினார் என்றும் மூத்த நீதிபதி கே. ஆர் தேஷ்பாண்டே கூறியுள்ளார். இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று  என்று காவல் அதிகாரி சுனில் பாண்டே தெரிவித்தனர். 



இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு மாவட்ட நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞரான நிதின் டெல்கவுடே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடாது. அவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால், அவர் சரியான முறையில் புகார் செய்திருக்க வேண்டும். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடக்கூடாது. வழக்கறிஞர்களிடம் இருந்து இதுபோன்ற சம்பவத்தை சங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதின் டெல்கவுடே கூறியுள்ளார்./