பாதுகாப்பு படை வீரர்களின் வாகன அணிவகுப்பில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலால் ஜம்முவில் மொபைல் இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 CRPF வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு  புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தின் அருகே சென்றது. அப்போது எதிரே பயங்கரவாதிக்கள் வெடிகுண்டு ஏந்திய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் பயணித்த கான்வாயில் புகுந்தது மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் 39 வீரர்கள் பலியாகினர்.


இந்த காரை ஓட்டி வந்தவன் அடில் அகமது எனவும், அவன் புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவந்துள்ளது. 2018-ஆம் ஆண்டு  ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான். பயங்கரவாதிகளின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க CRPF வீரர்கள் தயாராகி வருகின்றனர். 


இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானும் புல்வமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் வருத்தத்திற்குரியது. 


உலகின் எந்த பகுதியிலும் வன்முறை நடைபெற்றாலும் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணை நடத்தாமலே  இந்த தாக்குதலுக்கு எங்கள் மீது பழி போடும் இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களின் கருத்துக்களை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசாருக்கு பாகிஸ்தானே அடைக்கலம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. 



இதை தொடர்ந்து தற்போது, இந்த கொடூர தாக்குதலால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் தொலைபேசி இணையசெவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.