புனேயில் கட்டிடம் இடிந்து 9 பேர் பலி
மராட்டிய மாநிலம் புனேயில் கட்டுமானம் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
புனேயில் பாலிவாடி பகுதியில் குடியிருப்பு கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வந்தது. 13-வது மாடியில் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் சிலாப் விழுந்து விபத்து நேரிட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இன்று 11 மணியளவில் இவ்விபத்து நேரிட்டு உள்ளது. இச்சம்பவத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கட்டிடத்தின் உரிமையாளர், மற்றும் கட்டுமான ஒப்பந்தம் பெற்றவரின் தகவலை பெற போலீசார் விசாரித்து வருகின்றனர்.