பெண்களுக்கு இரவில் இலவச போலீஸ் டிராப் வசதியை அறிமுகம் செய்தார் பஞ்சாப் CM!
இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் அறிமுகப்படுத்தினார்!
இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் அறிமுகப்படுத்தினார்!
டெல்லி: பெண்கள் பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் சிக்கித் தவித்தால் பெண்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல இலவச போலீஸ் உதவியை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். DIAL 100, 112 மற்றும் 181 அழைப்புகளில் மாநிலம் தழுவிய காலவல்துறையினரின் வசதி கிடைக்கும். இதன் மூலம் பெண் அழைப்பாளர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு (PCR) இணைக்கப்படுவார்.
மாநிலம் முழுவதும் இந்த வசதியை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு போலீஸ் டைரக்டர் ஜெனரல் (PCR) தின்கர் குப்தாவுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் சில நாட்களுக்கு முன்பு கால்நடை பெண் மருத்துவர் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
இதன்படி, இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்படும் என்றும், இரவு நேரத்தில் வீடு திரும்ப பாதுகாப்பான வாகனம் எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த சேவையை பெண்கள் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவி எண்கள் 100, 112, 181 ஆகியவற்றில் தொடர்புகொண்டு போலீசாரிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கோரலாம் என்றும், பெண் போலீஸ் ஒருவருடன் போலீஸ் வாகனத்தில் பெண்கள் அவரவர் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.