Election Results Update: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவர் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஃபரித்கோட் மக்கள்வைத் தொகுதியில், தற்போதைய நிலவரப்படி, சரப்ஜீத் சிங் கல்சா 55882 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாபின் 13 மக்களைத் தொகுதிகளுக்குமான தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் முதன் நாளன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு 117 எண்ணும் இடங்களில் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியப் பணிகள் மற்றும் குடிமைப் பணிப் பணியாளர்களில் இருந்து 64 பேர் கொண்ட வாக்கு எண்ணும் பார்வையாளர்கள் குழு, வாக்கு எண்ணும் செயல்முறையை கண்காணித்து வருகிறது. 
 
பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் பஞ்சாப் மாநிலம், அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.  அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாப் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் (INC), ஆம் ஆத்மி கட்சி (AAP), பாரதிய ஜனதா கட்சி (BJP), ஷிரோமணி அகாலி தளம் (SAD) ஆகிய கட்சிகள் முக்கிய கட்சிகளாக களத்தில் உள்ளன. 


மேலும் படிக்க | Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?


2019 மக்களவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளமும் பிஜேபியும் தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றன. பஞ்சாபில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி ஒரு மக்களைவைத் தொகுதியைக் கைப்பற்றியது. 


இந்த நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக் கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கொடுக்கும் என்பது முக்கியமானது.


கேஜ்ரிவால் மீது தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கைது, ஜாமீன் என பரபரப்பு நிலவி வந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர். தற்போது, காங்கிரஸ் 6 மக்களவைத் தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி மூன்று தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியிலும், ஷிரோன்மணி அகாலி தளம் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் இரு தொகுதிகளிலும் முன்னனியில் இருக்கின்றனர்.


மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: மக்களவை தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ