Tamil Nadu Lok Sabha Election Result: மக்களவை தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள்!

Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், திமுக கூறியுள்ள தேர்தல் அறிக்கைகள் பற்றி பார்ப்போம்.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 09:59 AM IST
  • திமுக 30க்கும் அதிகமாக முன்னிலை.
  • பாஜக 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.
  • கோவையில் அண்ணாமலை பின்னடைவு.
Tamil Nadu Lok Sabha Election Result: மக்களவை தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள்! title=

Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் திமுக முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது. பாஜக திருநெல்வேலியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள் பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?

 

திமுக தேர்தல் அறிக்கை:

  • ஆளுநர் பதவி தேவையில்லை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநரும் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும்.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்திட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 356ஐ அகற்றிட தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்.
  • 2020 ஆம் ஆண்டில் புகுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படைக் கோட்பாட்டிற்கு எதிரானது; இந்திய மக்களின் சுதந்திரத்தை நசுக்குவதாகும். புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்துவது தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகும். ஆகையால், தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன், அதனை ரத்து செய்திட ஆவன செய்யும்.
  • நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய இட ஒதுக்கீடுகள் ஒன்றிய அரசில் இதர பிற்படுத்த பட்டவர்க்கு எதிலும் கடைப்பிடிக்கப்படாமையால் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் உயர்வகுப்பு ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பட்டியல் இன, மலைவாழ் இன, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.
  • கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி.அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.
  • மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  • வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
  • ஒன்றிய திட்டக் குழுவைப் போல, ஒன்றிய நிதிக் குழுவும் நிரந்தர குழுவாக அமைக்கப்படும்.
  • வசூலிக்கப்படும் கூடுதல் வரி செலவிடப்படும் முறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்படும்.
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லாக் கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு வட்டி இல்லாக் கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.
  • ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.
  • பயிர்க் காப்பீட்டிற்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை அரசே செலுத்தும். இத்திட்டம் செங்கரும்பு விரிவாக்கப்படும். பயிரிடுவோருக்கும்
  • மாணவ- மாணவிகள் நலன் கருதி இந்தியா முழுவதும் நான் முதல்வன்- புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

மேலும் படிக்க | Krishnagiri Tamil Nadu Election Result 2024: கிருஷ்ணகிரி தொகுதி முன்னணி விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News