Punjab Shocker: 16 வயது சிறுமியை கடத்த தன் 19 வயது மகனுக்கு உதவிய தாய்!!
சிறுமியின் தாய், காவல்துறைக்கு அளித்த புகாரில், அபிஷேக் அடிக்கடி தனது மகளைத் தொந்தரவு செய்ததாகவும், உள்ளூர்வாசிகளுக்கும் அது தெரியும் என்றும் கூறினார்.
பஞ்சாப்: பஞ்சாபின் லூதியானா (Ludhiana) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், 16 வயது பெண்ணைக் கடத்த, ஒரு தாய் தனது 19 வயது மகனுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. தாய்-மகன் இருவரையும் போலீசார் கைது செய்து வியாழக்கிழமை இரவு சிறுமியை அவர்களது உறவினரின் வீட்டில் இருந்து மீட்டனர்.
ஆயுதங்களுடன் வீட்டில் நுழைந்த கும்பல் பெண்ணைக் கடத்தியது
செப்டம்பர் 23 இரவு, குற்றம் சாட்டப்பட்ட மனிஷா (47) என்ற பெண், அவரது மகன் அபிஷேக், அவரது மகள் உட்பட 6 பேருடன் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்றார். தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய கும்பல், சிறுமியின் வீட்டில் களேபரத்தை உண்டு பண்ணியது. சிறுமியின் பெற்றோரை அடித்து, வலுக்கட்டாயமாக அக்கும்பல் அந்த சிறுமியை இழுத்துச் சென்றது. இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் போலீசாரை (Punjab Police) அணுகினர்.
சிறுமியின் தாய், காவல்துறைக்கு அளித்த புகாரில், அபிஷேக் அடிக்கடி தனது மகளைத் தொந்தரவு செய்ததாகவும், உள்ளூர்வாசிகளுக்கும் அது தெரியும் என்றும் கூறினார். “அபிஷேக் அடிக்கடி என் மகளைத் தொந்தரவு செய்வார். பல முறை, அப்பகுதி மக்கள் தலையிட்டு அவரைப் பின்தொடர்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயிடமிருந்து புகாரைப் பெற்ற போலிசார் (Punjab Police) உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். வியாழக்கிழமை இரவு, மைனர் சிறுமி, தாய்-மகன் இருவரின் உறவினரின் வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டார்.
தாய்-மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர், மற்றவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று ஏ.எஸ்.ஐ தெரிவித்தார்.
மணீஷ் மற்றும் அபிஷேக் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் பல்விந்தர் சிங், மற்ற குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று கூறினார். அவர்கள் மீது IPC பிரிவு 365 (கடத்தல்), 506 (கிரிமினல் மிரட்டல்), 148 (கலகம்), 149 (சட்டவிரோத முறையில் கூடி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவது), 452 (வீட்டிற்குள் அடாவடியாகப் புகுதல்) 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துவது) மற்றும் 324 (தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் கடுமையான காயத்தை ஏற்படுத்துவது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என ASI கூறினார்.
ALSO READ: ஆம்புலன்ஸ் வாகனத்தில் Covid நோயாளியை பலாத்காரம் செய்த ஓட்டுனர்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR