பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில் இருக்கு மூஸ்வாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. இவர் சுப்தீப் சிங் சித்து என்றும் அழைக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின் பொறியியலில் பட்டம் பெற்ற அவர் கல்லூரி நாள்களில் இசையை கற்றுக்கொண்டு கனடாவுக்கு சென்றார். இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு பெயர் போனவை.  2019ஆம் ஆண்டு வெளியான அவரது பாடலான ஜட்டி ஜியோனே மோர் தி பண்டூக் வார்கி என்ற பாடல் 18ஆம் நூற்றாண்டைச் சேந்த சீக்கிய போர்வீரர் மாய் பாகோவை மோசமாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார்.


இசை மட்டுமின்றி அரசியலிலும் அவர் ஈடுபட்டார். கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸில் இணைந்த அவர் இந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மான்சா தொகுதியில் அக்கட்சி சார்பில் களமிறங்கினார். ஆனால், 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.



இந்தச் சூழலில் அவர் கடந்த மாதம் பலி ஆடு என்ற பாடலை வெளியிட்டார். அதில் ஆம் ஆத்மி கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து கதர் (துரோகி) என்று கூறியிருந்தார்.


இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் இன்று சித்து காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். அதில் அவரும், அவருடன் இருந்த 3பேரும் படுகாயம் அடைந்தனர்.


மேலும் படிக்க | இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்குமே சொந்தம்; ஒவைசி பேச்சு


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பட்டப்பகலில் பிரபல பாடகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும், அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப் சிங் சுர்ஜேவாலா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “பட்டப்பகலில் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். 


 



உலகெங்கிலும் உள்ள பஞ்சாபிகள், மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து மக்களுடன் இணைப்பில் இருந்த கலைஞரை இழந்துள்ளனர். அவரது ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். பாடகர் சித்துவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு நேற்று விலக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஐதராபாத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை - பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற பெற்றோர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR