பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் பங்கேற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 20-ந் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில், 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 365 நிறுவனங்களின் கண்காட்சி மையங்களும் இடம் பெற்றுள்ளன.


இன்று 4வது நாள் நிகழ்ச்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பயணித்தார். பின்னர் விமானத்தின் காக்பிட் பகுதியில் அமர்ந்து சிறிது நேரம் பயணித்தார். இளம் வயதில் தேஜஸ் விமானத்தில் துணை விமானியாக பயணித்தது பி.வி.சிந்துதான்.