கேரளாவிற்கு மக்கள் அதிகம் வசிக்கும் கத்தார் நாடு ரூ.34.89 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில், கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக வரலாறு கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரமாக கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், மின்சாரம், போக்குவரத்து, உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கி கேரளா தவித்துவருகிறது. 


வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றும் பணியிலும் அவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் பணியிலும் 38 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு உபகரணங்கள் இதர பொருட்களைக் கொண்டு சென்று சேர்க்கும் பணியில் 20 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொங்கி ஓடும் ஆறுகளால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் பலரும் மார்பளவு தண்ணீரில் தத்தளித்தபடி தங்கள வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 


இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில் கேரளா வெள்ள நிவாரண நிதியாக இதனிடையே, கேரள மாநில மக்கள் அதிகம் வசிக்கும் கத்தார் நாடு, வெள்ளத்தால் பாதித்த மக்களுக்காக மக்கள் அதிகம் வசிக்கும் நாடான கத்தார் சுமார் ரூ.34.89 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது...!