ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் காங்கிரஸ் இன்று மனு அளிக்க உள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல கோடி ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 540 கோடிக்கு இருந்த ஒப்பந்தம் எப்படி பிஜேபி ஆட்சியில் ரூ. 1600 கோடியாக மாறியது என கேள்வி எழுப்பி வருகிறது காங்கிரஸ்.  


இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுக்கிறது. 


ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ்- பாரதீய ஜனதா இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு  குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய தணிக்கை வாரியத்திடம் (சிஏஜி) இன்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.