இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் ரபேல் போர் விமானங்கள் இடம்பெற உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் 70 வது குடியரசு தினம் (Republic Day) வரும் ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டை சேர்ந்த தலைவர்கள் யாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவில்லை. 


முதலில் பிரிட்டன் (Britain) பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், உருமாறிய கொரோனா பரவல் காரணமாக, பிரிட்டனில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சுரிநாம் அதிபர் கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவரும் கலந்துகொள்ளவில்லை என பின்னர் தகவல் வெளியாகியது.


குடியரசு தின அணிவகுப்பில் வழக்கமாக கலந்து கொள்ளும் குழுக்கள், வீரர்களின் எண்ணிக்கையும், தொற்று பரவல் (Corona Virus)  காரணமாக குறைக்கப்பட்டுள்ளன. 


எனினும், இந்திய விமானப்படையினர் குடியரசு தின விழா அன்று நடத்தும் சாகச நிகழ்ச்சியில் இந்தியாவின் கம்பீரமான பெருமைமிகு ரபேல் (Rafale) போர் விமானங்கள் முதல் முறையாக இடம்பெற உள்ளன. 


விமானப்படை சாகசத்தின் போது, வழக்கமாக வெல்டிகல் சார்லி என அழைக்கப்படும் சாகசத்தில், போர் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறந்து, பின்னர் அவை தலைகீழாக சுழன்று சாகசம் நிகழ்த்தும். இந்த ஆண்டு இந்த சாகசத்தை ரபேல் விமானம் மேற்கெள்ளும் என கூறப்படுகிறது. இந்த தகவலை விமானப்படை விங் கமாண்டர் இந்திராணி நந்தி தெரிவித்துள்ளார்.


 ஜனவரி 26 அன்று நடைபெற உள்ள  இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், இந்திய விமானப்படையை சேர்ந்த 38 போர் விமானங்களும், இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 விமானங்களும் வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


ALSO READ |டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR