ரஃபேல் வழக்கு: SC-ல் மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்!
ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்த நிலையில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய அவசியமில்லை என மத்திய அரசு விளக்கம்!!
ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்த நிலையில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய அவசியமில்லை என மத்திய அரசு விளக்கம்!!
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய கோரியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் கட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிராக பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி உத்தரவில் ரஃபேல் ஒப்பந்தம் மிகச்சரியானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் தொடர்பான கோப்பின் ஒரு பகுதி விவரங்களை மட்டுமே திரித்து திட்டமிட்டுப் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது தான். தகவல் மீடியாக்களில் வெளியான ஒரு சில தகவல்களை அடிப்படையாக கொண்டு மட்டும் மறு ஆய்வு செய்யக் கூடாது.
புதிய ஒப்பந்தத்தின் படி, ரஃபேல் போர் விமானத்தின் விலை 2.86% குறைவாக உள்ளது என்று மத்திய தணிக்கை வாரியமே கூறியுள்ளது. எனவே ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை" என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அத்கைய சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.