இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் செப்டம்பர் 10 ஆம் தேதி ரபேல் விமானம் இந்திய விமான படையில் முறையாக இணைக்கப்படும். அந்த நிகழ்வில், பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கலந்து கொள்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை 10 ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 5 தற்போது பிரான்சில் உள்ளன, அதில் இந்திய விமானப்படை விமானிகள் பயிற்சி பெறுகின்றனர்.


புதுடெல்லி: இந்திய சீன எல்லையில், எல் ஏ சி பகுதியில் நிலவும் பதற்றத்திற்கு இடையே வியாழக்கிழமை அம்பாலா விமான தளத்தில் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்படும். இந்த நேரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர்புளோரன்ஸ் பார்லி மற்றும் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.


நிகழ்ச்சிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பார்லி மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் அம்பாலாவில் கலந்துரையாடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி அமைச்சர் வியாழக்கிழமை காலை இங்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் 36 போர் விமானங்களை ரூ .59,000 கோடி செலவில் வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி ஜூலை 29 அன்று இந்தியாவை வந்தடைந்தது. 


பிரெஞ்சு விமான நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த இந்த விமானங்கள் இதுவரை முறையாக விமானப்படையில் சேர்க்கப்படவில்லை. இதுவரை 10 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்து விமானங்கள் தற்போது பிரான்சில் உள்ளன, அதில் இந்திய விமானப்படை விமானிகள் பயிற்சி பெறுகின்றனர்.


அனைத்து 36 போர் விமானங்களும் 2021 இறுதிக்குள் இந்தியாவிற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு ரஃபேல் போர் விமானங்களின் மற்றொரு தொகுதி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | சீனாவின் முகத்திரை கிழிந்தது...ஈட்டிகளை ஏந்திய சீன படையினர் புகைப்படம் வெளியீடு..!!


பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பார்லியின் பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மேலும் 36 போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரஷ்யாவிலிருந்து சுகோய் விமானங்களை வாங்கிய பிறகு, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து வான் பரப்பில் மிக துல்லியமாக தாக்குதல் நடத்தும் ரஃபேல் விமானங்கள், வாங்கப்பட்டுள்ளன. ரஃபேல் விமானங்களில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட அமைப்புகள் உள்ளன.


மேலும் படிக்க | சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கும் தைவான்..!!!