தென்சீன கடல் பகுதியை ராணுவமயமாக்கும் நடவடிக்கை, தைவான் ஜலசந்தி மற்றும் கிழக்கு சீனக்கடலில் மேற்கொண்டு வரும் தந்திர நடவடிக்கைகள், அண்டை நாடுகளை நிர்பந்திக்கும் நடவடிக்கைகள், ஆகியவற்றால், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரதன்மை பாதிக்கிறது என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு தாய்லாந்து அதிபர் சாய் இங் வென் ( Tsai Ing-wen) கூறினார்
தைவான் அதிபர் சாய் இங்-வென் செவ்வாயன்று "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு" எதிராக பிராந்தியத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகக் கூட்டணி தேவை என அழைப்பு விடுத்தார், தென் சீனக் கடல் மற்றும் தைவான் ஜலசந்தியில் சீன நடவடிக்கைகள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல்கள் என்று குறிப்பிட்டார்.
சீனாவின் அத்துமீறல்களை ஒடுக்க உலகின் ஜனநாயக நாடுகள் கூட்டாக முன்வர வேண்டும் என தைவான் விரும்புகிறது.
ஜனநாயக நாடான தைவானை தனது சொந்தமான நாடு எனக்கூறும் சீனா, தீவைச் சுற்றி, தனது இராணுவ நடவடிக்கைகளையும், சர்ச்சைக்குரிய கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தையும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | சிக்கிமில் 'ஜீரோ டிகிரி'யில் வழி தவறி தவித்த சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்..!!
தைவானில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த மேற்கத்திய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட ஒரு மன்றத்தில் பேசிய தைவான் அதிபர் சாய், "சர்வாதிகார ஆக்கிரமிப்பிலிருந்து" ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தைவான் முன்னணியில் உள்ளது என்றார்.
"இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளும், ஜனநாயக நட்பு நாடுகளும், ஒருதலைப்பட்ச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் ஒரு மூலோபாயத்துடன் கூடிய ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது" என தைவான் அதிபர் கூறினார்.
மேலும் படிக்க | லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்... தொடர்ந்து அத்து மீறும் சீனா..!!!