பிக் பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவான காஞ்சனா 3 மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது......


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்தது.


தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் காஞ்சனா-2 திரைப்படமும் வெளியானது. இதன் அனைத்துப் பாகங்களிலும் ஹீரோவாக லாரன்ஸே நடித்திருந்தார். வெளிவந்த இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தன.


தற்போது இந்தப் படத்தின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார்.


இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா , தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த நிலையில்,காஞ்சனா 3 படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை பொங்கல் தினத்தன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகயுள்ளதாக்காகவும் தெரிவித்துள்ளனர்.